உடைந்த விண்கலங்களின் பாகங்கள் உட்பட ஏராளமான கழிவுப் பொருட்கள் விண்வெளியில் காணப்படுகின்றன.
இவற்றினை முற்றாக அகற்றுவதற்கு லேசர் தொழில்நுட்பத்தினை பயன்படுத்த முடியும் என சீன ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
அண்மைக் காலமாக வெகு விரைவில் அதிகரித்து வரும் இவ்வாறான கழிவுகள் செயற்கைக் கோள்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறாக விளங்கி வருகின்றன.
இவ்வாறான நிலையிலேயே சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழு ஒன்று லேசர் தொழில்நுட்பத்தின் ஊடாக கழிவுகளை அகற்றி எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளது.
இத் தொழில்நுட்பத்திற்கான மாதிரி அமைப்பினை அவர்கள் உருவாக்கியுள்ள போதிலும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.