ஆரோக்கியமான தூக்கத்திற்கு உதவும் மாஸ்க் உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

தூக்கமின்றி தவிப்பவர்களுக்கும், தூக்கத்தின்போது அசௌகரியங்களை உணர்பவர்களுக்கும் ஆறுதல் தரக்கூடிய மாஸ்க் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

Luuna எனப்படும் இந்த மாஸ்க் ஆனது Intelligent Sleep Mask என அழைக்கப்படுகின்றது.

முகத்தில் கண்களிற்கு நேரே அணியக்கூடியதாக இருக்கும் இந்த மாஸ்க் ஆனது மூளையின் சமிக்ஞைகளை ஒத்திசைவாக்கம் செய்வதன் ஊடாக நிம்மதியானதும், ஆரோக்கியமானதுமான தூக்கத்தினை வழங்குகின்றது.

எதிர்வரும் ஜுன் மாதம் முதல் இதனைக் கொள்வனவு செய்துகொள்ள முடியும்.

அத்துடன் இதன் விலையானது 56 பவுண்ட்ஸ்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers