கூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள்? அவசியம் இப் புதிய வசதி பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

சில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள் தமது Location History உட்பட தனிப்பட்ட தகவல்களை அழிக்கக்கூடிய வசதியினை கூகுள் அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

மூன்று மாதங்கள் தொடக்கம் 18 மாதங்கள் என்ற இடைவெளியில் குறித்த தகவல்களை அழிக்கக்கூடியதாக இவ் வசதி வழங்கப்பட்டிருந்தது.

அதேநேரம் பயனர்களே தாம் விரும்பிய நேரத்தில் இத் தகவல்களை அழிக்க வேண்டும்.

இப்படியிருக்கையில் பயனர்களிற்கு இச் செயற்பாட்டினை இலகுபடுத்தும் விதமாக இவ் வசதியில் மாற்றம் ஒன்றினை கொண்டுவர கூகுள் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

இதன்படி தானியங்கி முறையில் Location History உட்பட ஏனைய தனிநபர் தகவல்கள் அழியக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே எவ்வளவு காலத்திற்கு ஒரு தடவை இத் தகவல்கள் அழிய வேண்டும் என Settings செய்து வைக்க வேண்டும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்