iOS 13 பதிப்பில் தரப்பட்டுள்ள வசதியால் கலக்கத்தில் பேஸ்புக்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஆப்பிள் நிறுவனமானது தனது மொபைல் சாதனங்களுக்கான iOS இயங்குதளத்தின் 13வது பதிப்பினை வெளியிட்டுள்ளது.

iOS 13 எனும் இப் பதிப்பில் பயனர்களுக்கு பெரும் உதவியாக இருக்கக்கூடிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இவ் வசதியின் ஊடாக எந்தெந்த அப்பிளிக்கேஷன்கள் பின்னணியில் பயனர்களின் இருப்பிடங்கள் (Location Data) தொடர்பான தகவல்களை பயன்படுத்துகின்றன என்பது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்படும்.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக தெளிவுபடுத்தும் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இதன்படி பேஸ்புக் நிறுவனமும் Check Ins, Events உட்பட மற்றும் பல வசதிகளை துல்லியமாக காண்பிப்பதற்காக பயனர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களை சேமிக்கின்றது.

இத் தகவல் சேமிப்பானது பயனர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காகவே என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் இருக்கும் நண்பர்களை கண்டறிதல், அண்மையில் உள்ள பொது Wi-Fi இணைப்புக்களை கண்டறிதல் போன்றவற்றிற்கும் Location தொடர்பான தகவல் அவசியம் ஆகும்.

எவ்வாறெனினும் iOS மற்றும் Android சாதனங்களில் Location காண்பிப்பதை கட்டுப்படுத்தக்கூடிய வசதியும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்