ஆப்பிள் நிறுவனத்தை பின்பற்றவுள்ள சாம்சுங் நிறுவனம்: Galaxy S21 இப்படித்தான் அறிமுகமாகுமாம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
96Shares

ஆப்பிள் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான iPhone 12 இனை அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசிகளில் வழமைக்கு மாறாக சார்ஜர் மற்றும் ஹெட்போன் என்பன சேர்த்து தரப்படமாட்டாது.

மாறாக அவற்றினை தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும்.

இதனை சாம்சுங் நிறுவனமும் பின்பற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிறுவனம் அடுத்த தனது பிரதான ஸ்மார்ட் கைப்பேசியாக Galaxy S21 இனை அறிமுகம் செய்யவுள்ளது.

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

எனினும் இக் கைப்பேசியுடன் சார்ஜர் மற்றும் ஹெட்போன் என்பன தரப்படாது எனவும், அவற்றினை தனியாகவே வாங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்