இலங்கையின் தலையெழுத்தை தீர்மானிக்கும் தலைவன் யார்.. உங்கள் தெரிவு?

இலங்கையராக வாழும் எம் ஒவ்வொருவருக்கும் இந்த நாடு தொடர்பான பாரிய பொறுப்புக்கள் உள்ளன.

இலங்கை குடிமகனாக நாம் செய்ய வேண்டிய மிக முக்கிய கடமைகளில் ஒன்று நாட்டின் தலைமைத்துவத்தையும் தலைவரையும் தேர்ந்தெடுப்பது. அவ்வாறான சவாலுக்குரிய ஒரு கடமை சமகாலத்தில் எம் மக்களிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

ஆம், எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இலங்கையர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருமித்து முடிவெடுக்கவும் நாட்டின் அடுத்த தலைமைத்துவத்தை தேர்ந்தெடுக்கவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாம் தேர்ந்தெடுக்கும் தலைமைத்துவம் எவ்வாறு அமைய வேண்டும்? இந்த நாட்டின் தலைவரை நாம் தேர்வு செய்யும் போதே அடுத்த ஐந்து வருடங்களுக்கான நாட்டு மக்களின் எதிர்காலத்தையும் தேர்ந்தெடுக்கப் போகின்றோம்.

சிறந்த தலைவரை தேர்ந்தெடுப்பதன் மூலம் மக்களின் சிறந்த எதிர்காலத்தையும் நாம் தேர்ந்தெடுக்கின்றோம்.

அவ்வாறான சிறந்த தலைவராக இன்று எம்மத்தியில் களமிறங்கியிருக்கின்றார் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாச.

இன்று வடக்கு, கிழக்கு மற்றும் சிறுபான்மை மக்களின் மனங்களை வென்ற ஒரு தலைவராகவும், நாட்டில் பெரும்பாலான மக்களின் விருப்பத்திற்குரிய ஒருவராகவும் சஜித் பிரேமதாச திகழ்கின்றார்.

மக்களின் அடிப்படை தேவைகளுள் ஒன்று தாம் குடியிருப்பதற்கான வீடு. இன்று நாடளாவிய ரீதியில் பரந்தளவில் வாழும் வீடற்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அமைச்சர் சஜித் பிரேமதாசவின் அபிவிருத்தி திட்டங்கள் ஊடாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கொள்கைகள் ஊடாக தந்தை வழியை தானும் பின்பற்றி ஏழை மக்களுக்கான தனது சேவைகள் ஊடாக மக்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கின்றார் சஜித்.

தனது உடையிலோ, தமது நடத்தைகளிலோ என்றுமே ஆடம்பரத்தை விரும்பாத அமைச்சர் சஜித் பிரேமதாச எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த இளம் தலைவராக எம்மத்தியில் இருக்கின்றார்.

இந்த நிலையில் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்கும்... அடுத்த சந்ததியினர் தொடர்பில் சிந்திக்கும் உங்களது தெரிவு யார்?

எதிர்காலம் வளமாக மாற எமது தெரிவு சஜித் பிரேமதாசவாக இருக்கட்டும்...