கர்ப்ப காலத்தில் மீன் மாத்திரை சாப்பிடலாமா?

Report Print Kavitha in கர்ப்பம்

ஒமேகா 3 நிறைந்த மீன் மாத்திரைகள் ஊட்டச்சத்துக்களில் முக்கியமான ஒன்றாகும்.

இவை சில கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் எடுக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் இருக்கும்.

உண்மையில் இது ஏன் கர்ப்பிணி பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணமாக புரோஸ்ட்டக்ளாண்டின்கள் உள்ளன.

இவை குழந்தையின் உடலத்திற்கும் தாயின் உடல் நலத்திற்கும் உதவுகிறது.

ஒமேகா 3 யில் ஒரு நீண்ட பாலியன்சேச்சுரேட் நிறைந்த கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை ஊட்டச்சத்துக்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

அந்தவகையில் மீன் மாத்திரைகளை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா? சாப்பிட கூடாதா? என பார்ப்போம்.

கர்ப்பிணி பெண்கள் ஏன் ஒமேகா 3 எடுக்க வேண்டும் ?

புரோஸ்ட்டக்ளாண்டின்கள் எனப்படும் இவை ஹார்மோன்களின் உற்பத்தியை சமநிலையில் வைத்துக் கொள்வதற்கு ஒமேகா 3 தேவைப்படுகிறது.

புரோஸ்ட்டக்ளாண்டின்களின் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்க்கு ஒமேகா 3 உதவுகிறது.

மேலும், இந்த புரோஸ்ட்டக்ளாண்டின்கள் உயர் இரத்த அழுத்தம், இரத்த உறைதல், நரம்பு தளர்ச்சி, தோல் அழற்சி மற்றும் ஒவ்வாமை, சிறுநீரகங்கள் மற்றும் இரைப்பைக் குழாயின் செயல்பாடுகள் மற்றும் பிற ஹார்மோன்களின் சமந்தமான பல முக்கியமான உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த உதவுகிறது.

ஒமேகா 3 எடுத்துக்கொள்வதால் குறைப்பிரசவம் போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

மேலும் குழந்தைகளின் எடை அதிகரிக்க ஒமேகா 3 உதவுகிறது.

ஒமேகா -3 குறைபாடு கர்ப்பிணி பெண்களின் மனச்சோர்வின் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.

மகப்பேறுக்கு பின்பு ஒமேகா -3 எடுத்து கொள்ளலாமா?

கர்ப்பகாலம் முடிந்த பிறகும் உங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஒமேகா 3 மீன் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

மகப்பேறுக்கு பின்பு தாய்மார்களின் உணவில் இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ அமிலங்கள் சேர்த்துக் கொள்வதால் குழந்தைகளின் அறிவாற்றல் அதிகரிக்கச் செய்யலாம்.

ஒமேகா 3 எடுத்துக் கொள்வதால் குழந்தைகளின் ஒவ்வாமைகளை குறைக்கலாம்.

ஒமேகா 3 மாத்திரைகள் சாப்பிட முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஒமேகா 3 மாத்திரைகள் சாப்பிட முடியாதவர்கள் ஒமேகா-3 நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.

இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ நிறைந்த சால்மன், டுனா, மத்தி, ஆன்கோவிஸ் மற்றும் ஹெர்ரிங் போன்ற மீன்களை சாப்பிடலாம்.

ஆனால் சிலர் மீன்களில் உள்ள பாதரசம் மற்றும் நச்சுக்கள் காரணமாக கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும் செய்கிறார்கள்.

அப்படி தவிர்ப்பவர்கள் சுத்தமான மீன் எண்ணையில் இருந்து பெறப்பட்ட இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ நிறைந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

நல்ல மீன் மாத்திரைகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

இயற்கையாக கிடைக்கும் மீன்களில் கூட சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக பாதரசம் மற்றும் நச்சுப் பொருட்கள் கலந்து இருக்கலாம்.

ஆனால் மீன் மாத்திரைகளை தயாரிக்கும் போது அதில் உள்ள நச்சுக்கள் அகற்றப்பட்டு சுத்தமான மீன் எண்ணெய்கள் மட்டும் எடுக்கப்படுகிறது.

ஆனால் மாத்திரைகளை வாங்கும் போது அதன் தரத்தை சரிபார்த்து வாங்க வேண்டியது அவசியம்.

முக்கிய குறிப்பு

நீங்கள் மீன் மாத்திரைகளை வாங்கும் போது அதில் வாசனை வருகிறதா என்பதை சோதித்து வாங்குங்கள்.

மீன் மாத்திரைகள் கெட்டுப்போனால் மட்டுமே வாசனை வர வாய்ப்புள்ளது.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்