பூமிக்கு வந்த 7 அங்குல வேற்றுக்கிரக புத்திஜீவிகள் நம்பவைக்கும் ஆதாரம்

Report Print Mawali Analan in விஞ்ஞானம்

7 அங்குல உயரமான வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்கள் பூமியில் வாழ்ந்து வந்தமைக்கும் ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மேலைத்தேய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேற்றுக்கிரக புத்திஜீவிகள் தொடர்பிலான ஆய்வுகளும் மர்மங்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. ஆனால் அறிவியல் அறிந்த, கண்டுபிடித்த உண்மைகள் மட்டும் வெளிப்படுத்தப்படுவதில்லை.

அந்த வகையில் பூமிக்கு வேற்றுக்கிரக வாசிகளின் வருகைகள் இடம்பெற்று வந்ததாகவே விண்வெளி தொடர்பில் ஆய்வு செய்பவர்களின் நம்பிக்கை.

அதற்கான ஆதாரத் தேடல்களுக்கு மட்டும் குறைவில்லாமல் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில் சிலி நாட்டு மலைப்பகுதியில் 7 அங்குல உயரம் கொண்ட மனித உடலமைப்பை ஒத்த எழும்புக் கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஆஸ்கர் முனோல்ஸ் என்பவர் இதனை கண்டுபிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இது குறித்த ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதனால் மேலும் பல எலும்புக்கூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டன.

பின்னர் ஸ்டீவன் கீரீயர் எனப்படும் ஆய்வாளர் மற்றும் எலும்பியல் டி.என்.ஏ நிபுணர் மூலமாக ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அதில் கிடைத்த ஆய்வு முடிவுகள் ஆச்சரியம் அளித்துள்ளது.

அதாவது குறித்த எலும்புகளோடு பூமிக்கு சம்பந்தப்படாத உலோகம் கலந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர் இதன் ஆய்வுகள் வேற்றுக்கிரகங்கள் தொடர்பில் ஆய்வு செய்பவர்களோடு இணைத்துக்கொள்ளப்பட்டு, வேறு கோணங்களில் ஆய்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.

அந்த ஆய்வுகள் மூலம் குறித்த எலும்புகள் வேற்றுக்கிரகவாசிகளுடையவை எனவும் அவர்கள் பூமிக்கு வந்து சென்றுள்ளார்கள் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த உயிரினம் சிரியஸ் எனப்படும் நட்சத்திரத் தொகுதிக்கு உரியவையாக இருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இவை வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய ஆதாரம் அதனால் வேற்றுக் கிரகவாசிகள் இருப்பது உண்மை எனவும் ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

எது எவ்வாறாயினும் விஞ்ஞானிகளும், விண்வெளி ஆய்வாளர்களும் வேற்றுக்கிரகங்கள் தொடர்பில் ஆதார பூர்வமாக நம்பிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டாலும் கூட.,

பூமிவாசிகள் மட்டும் பிரபஞ்சமே நமக்காக (மனிதர்களுக்காக) மட்டும் படைக்கப்பட்டது என்ற நம்பிக்கையை மட்டும் விட வில்லை. என்றாவது ஓர் நாள் அனைத்து இரகசியங்களும் வெளிப்படுத்தப்படலாம்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments