சொக்லெட் பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்: என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in விஞ்ஞானம்
239Shares
239Shares
lankasrimarket.com

அதிகரித்து வரும் சொக்லெட் தேவையாலும், நகரமையமாக்குதல் காரணமாகவும் 2050 ஆண்டுக்குள் கோகோ மரங்களே இருக்காது என்கிற அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

உலகில் அனைத்து மக்களும் விரும்பி உண்ணும் இனிப்புகளில் ஒன்றான சொக்லெட், கசப்பு சுவை கொண்ட கோகோவுடன் இனிப்பு சேர்க்கப்பட்டு செய்யப்படுகிறது.

ஐவரி கோஸ்ட் மற்றும் கானா ஆகிய இரு ஆப்பிரிக்க நாடுகளில் கொக்கோ மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், மழையிருந்தால் மட்டுமே வளரக்கூடிய கோகோ மரங்கள்,

புவி வெப்பமயமாவதால் ஈரத்தன்மையை இழந்து பட்டுப் போகும் என அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கணித்துள்ளது.

இந்த தகவல் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், உலகின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே செல்கிறது.

அடுத்த 30 ஆண்டுகளில் 2.1 செல்சியஸ் வெப்பநிலை கூடும். இதனால் சொக்லேட் உற்பத்தி அதிகளவு பாதிக்கப்படும். கோகோ மரங்கள் வளர்வதற்கு அதிகப்படியான மழை தேவை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் போதை பொருள் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் கோகோ மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இதே நிலை தொடர்ந்தால் வரும் 2050ம் ஆண்டு சொக்லெட்டே உலகில் அடியோடு மறையும் வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோகோ மரங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவு காணப்படுகின்றன. உலகில் 50 சதவீதம் சொக்லேட்டானது இங்கிருந்து தான் பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்