மனிதனின் நோயெதிர்ப்பு தொகுதியில் புதிய அங்கம் ஒன்று கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

ஆய்வாளர்கள் சுண்டெலிகள் மற்றும் மனிதர்களின் நோயெதிர்ப்புத் தொகுதியில் புதிய சிறிய அங்கம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

இது வருங்காலத்தில் தடுப்பூசிகள் தொடர்பான வினைத்திறனான செயற்பாடுகளுக்கு வழிவகுக்கக்கூடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் Garvan Institute of Medical Research இனைச் சேர்ந்த ஆய்வாளர்களால் இச் சிறிய வகை அங்கம் மெல்லிய, தட்டையான கட்டமைப்பாக எலிகளின் நோயெதிர்ப்பு தொகுதியின் மேலாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

இதை விஞ்ஞானிகள் "Subcapsular Proliferative Foci" (SPFs) எனப் பெயரிட்டுள்ளனர்.

இவ் அங்கமானது தொற்றுக்களுக்கெதிரான எதிர்த்தாக்கங்களை திட்டமிடும் உயிரியல் தலைமையகமாகத் தொழிற்படுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இவ் அங்கம் நோயெதிர்ப்புத் தொகுதியானது தொற்றுக்கு எதிராகப் போராடும் வேளையிலேயே வெளிப்படுகிறது எனவும் தெருவிக்கப்படுகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers