சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து படம்பிடிக்கப்பட்ட கொடிய சூறாவளி: அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியீடு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

புளோறென்ஸ் சூறாவளியானது அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் மையம் கொண்டுள்ளதாகவும், இது விரைவில் கரோலினபவின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளைத் தாக்கக்கூடும் எனவும் முன்னர் எதிர்வுகூறப்பட்டிருந்தது.

வகை - 4 சூறாவளியான இது அளவில் பெரியதாகவும், அதிக சக்திவாய்ந்ததாகவும் காணப்பட்டது.

இச் சூறாளவியின் புகைப்படங்கள் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள விண்வெளிவீரரான கேஸ்ட் என்பவரால் படம்பிடித்து வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேஸ்ட் தெருவிக்கையில், இது மிகப்பெரிய புயல், 500 மைல்கள் விட்டமானவை, விண்வெளியிலிருந்து பார்ப்பதற்கே படுபயரங்கமாள உள்ளது என்கிறார்.

இப் புகைப்படங்கள் சர்வதேச விண்வெளி நிலையம் புயலுக்கு மேலாக பறக்கும்போது படம்பிடிக்கப்பட்டிருந்தன.

நாசாவும் கடந்த புதனன்று இப் புயல் தொடர்பாக காணொளியொன்றை வெளியிட்டிருந்தது குறி்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers