செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டத்திலிருந்து படம்பிடிக்கப்பட்ட நாசாவின் ஒப்போயூனிட்டி ரோவர்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

செவ்வாய் கிரகத்தை சுற்றி வலம்வரும் சாட்டிலைட்டொன்று அக் கோளில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் நாசாவின் ஒப்போயூனிட்டி ரோவரைப் படம்பிடித்து வெளியிட்டுள்ளது.

ஒரு கோல்ஃப் வண்டியின் பருமனுள்ள இவ் ஒப்பர்சுனிற்றி ரோவரானது 2004, ஜனவரியில் செவ்வாயில் தரையிறக்கப்பட்டிருந்தது.

இது தனது ஆய்வுகளை மேலதிகமாக இன்னும் 90 நாட்களுக்கே தொடரும் என கருதப்படுகிறது.

எவ்வாறாயினும் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக இது செவ்வாயில் ஆய்வில் ஈடுபட்டுள்ளதுடன், சூரிய சக்தியைப் பயன்படுத்தி 28 மைல்களுக்கும் மேலாக அக்கோளில் பயணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 100 நாட்களுக்கு முன்னர் செவ்வாயில் ஏற்பட்டிருந்த தூசுப் புயல் காரணமாக மேற்படி ரோவருக்கு கிடைக்க வேண்டிய சூரிய ஒளி தடைப்பட்டிருந்தது.

இதன் காரணமாக ஜுன் 10 இல் அதன் செயற்பாடு நிறுத்தப்பட்டிருந்தது.

இது தொடக்கம் ஆய்வாளர்களால் ரோவரிலிருந்து எந்தவொரு செய்தியையும் பெற முடியவில்லை.

ஆனால் தற்போது பெறப்பட்டுள்ள சாட்டிலைட் படமானது ரோவர் விரைவில் உயிர் பெற்று பழைய நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

அண்மைய இரு வாரங்களில் செவ்வாயில் தூசுப்படலங்கள் தெளிந்து தக்க நிலைமைக்குத் திரும்பியுள்ளதால் கடந்த 20 ஆம் திகதி நாசாவின் செவ்வாய் புலனாய்வு சாட்டலைட்டினால் மேற்படி ரோவரை படம்பிடிக்க முடிந்திருக்கிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்