பணம் சம்பாதித்து தரப்போகும் காபனீரொட்சைட்: விஞ்ஞானிகளின் புதிய முயற்சி

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

பூமி வெப்பமடைதலில் பிரதான பங்கு வகிப்பது காபனீரொட்சைட் அதிகரிப்பாகும்.

உலகளவில் மரங்கள் வெகுவாக குறைவடைந்துள்ளதனால் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வாயு அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதிகரித்த காபனீரொட்சைட்டினை மனிதர்களுக்க உதவக்கூடிய பொருளாக மாற்றி அதன் மூலம் பணம் ஈட்டக்கூடிய வழிகள் ஆராயப்பட்டு வருகின்றது.

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் எதுவும் இதுவரை கைகொடுக்காத நிலையில் இப் புதிய திட்டமானது காலநிலை மாற்றத்துக்கு கைகொடுப்பதுடன் பணம் ஈட்டக்கூடியதாகவும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

காபனீரொட்சைட் ஆனது ஏற்கனவே எரிபொருள் தயாரிப்பு, பல்பகுதிய உற்பத்தி, பசளை உற்பத்தி, புரத உற்பத்தி போன்ற பல உற்பத்திகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனை விடவும் புதிய பெறுமதி மிக்க பொருட்களை உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த தகவலை Sheffield பல்கலைக்கழகத்தில் உள்ள Carbon Utilisation நிறுவனத்தை சேர்ந்த ஹேட்டி ஆம்ஸ்ரோங் வெளியிட்டுள்ளார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்