நிறம் மாறும் விண்கல்: முதன் முறையாக கண்டுபிடித்த வானியலாளர்கள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

இதுவரை ஏராளமான விண்கற்கள் அண்டவெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனினும் முதன் முறையாக நிறம்மாறக்கூடிய விண்கல் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

6478 Gault எனும் விண்கல்லே இவ்வாறு நிறம் மாறுவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

ஹவாயிலுள்ள Infrared தொலைகாட்டியின் உதவியுடனேயே இவ் அதிசய மாற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ் விண்கல்லானது சுமார் 3.7 கிலோ மீற்றர்கள் வரை அகலமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சூரியனில் இருந்து 345.6 மில்லியன் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்