விண்கல் மோதலே டைனோசர்கள் அழிவுக்கு காரணம்: மேலும் சில ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இப் பூமியில் டைனோசர்கள் எனப்படும் இராட்சத விலங்குகள் வாழ்ந்ததாக நம்பப்பட்டுவருகின்றது.

இவை வாழ்ந்தமைக்கான ஆதாரங்களும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த டைனோசர் இனமானது பூமியில் இருந்து அழிந்துபோனமைக்கு இராட்சத விண்கல் ஒன்று பூமியில் மோதியதாகவும், அதனால் ஏற்பட்ட தூசி பரவலினால் நீண்ட நாள் பூமிக்கு சூரிய ஒளி கிடைக்காமல் போனதாகவும் இதன் விளைவாக தாவரங்கள் ஒளித்தொகுப்பு செய்ய முடியாது போனமையால் டைனோசர்கள் உணவு, பிராண வாயு என்பன இன்றி இறந்ததாக சொல்லப்பட்டுவருகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது மேலும் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே மெக்ஸிக்கோவின் வளைகுடா பகுதியில் கரி மற்றும் மணல் கொண்ட கடினமான ஆதாரம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் இங்கு கந்தகம் எதுவும் கண்டுபிடிக்கப்படவிலல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

விண்கல் மோதியபோது சுமார் 325 பில்லியன் மெட்ரிக் தொன் கந்தகம் வெளியிடப்பட்டதாக ஏற்கணவே கருத்து தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தகவலை அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்