செவ்வாய் கிரகத்தில் உங்கள் பெயரை பதிவு செய்யலாம்! நாசாவின் அறிய வாய்ப்பு

Report Print Kabilan in விஞ்ஞானம்
108Shares

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, செவ்வாய் கிரகத்தில் மக்கள் தங்களின் பெயரை பதிவு செய்ய ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது.

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சிகளை நாசா தொடர்ந்து வருகிறது. அங்கு மனிதர்களை குடியேற்ற வேண்டும் என்பது தனது ஆவல் என, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்ததுடன் அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நாசா செவ்வாய் கிரகம் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தை ஆராய அடுத்த ஆண்டு அனுப்பப்படும் செயற்கைக் கோளில் ஒரு மைக்ரோ சிப் வைக்கப்படும் என்றும், குறித்த சிப் செவ்வாய் கிரகத்தில் வைக்கப்பட உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் மைக்ரோசிப்பில் பொறிக்க, உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பெயர்களை ஒன்லைனில் சமர்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மக்கள் தங்கள் பெயர்களை https://mars.nasa.gov/participate/send-your-name/mars2020 என்ற வலைப்பக்கத்தில் செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன் சமர்பிக்கலாம்.

அந்த பெயர்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள மைக்ரோ டிவைசஸ் ஆய்வகம், எலக்ட்ரான் கதிரை பயன்படுத்தி சிலிக்கான் சிப்பில் பெயர்களை பதிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாசாவின் அறிவிப்புக்கு பின்னர் 98 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் பெயர்களை சமர்பித்துள்ளனர். இதற்கிடையில், செவ்வாய் கிரகத்தை ஆராய ரோவர் 2020 என்ற செயற்கைக்கோள், அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஏவப்பட உள்ளது. இது பிப்ரவரி 2021க்குள் செவ்வாய் கிரகத்தைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers