திருமணம் செய்யவிருந்த மகளை கவுரவ கொலை செய்த தந்தை: வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்

Report Print Arbin Arbin in தெற்காசியா

பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்யவிருந்த மகளை தந்தை துப்பாக்கியல் சுட்டு கவுரவ கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் இம்ரான் என்பவரை பவுசியா என்ற இளம்பெண் காதலித்து வந்துள்ளார்.

இருவரும் ரகசியமாக சந்தித்தும் வந்துள்ளனர். இந்த தகவலை அறிந்த பவுசியாவின் தந்தை இக்பால் மிகுந்த ஆத்திரம் அடைந்தார்.

இதனையடுத்து பவுசியாவின் நடவடிக்கையில் மிகுந்த அதிருப்தி அடைந்த அவரும், பவுசியாவின் மாமா உட்பட சில உறவினர்களும் பவுசியா மற்றும் இம்ரானை தண்டிக்க திட்டமிட்டுள்ளனர்.

தொடர்ந்து பவுசியாவை தீவிரமாக கண்காணித்த குடும்பத்தினர், இக்பாலை சந்திக்க பவுசியா சென்றபோது ரகசியாமாக பின்தொடர்ந்து இக்பால் வீட்டில் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். இதில் இம்ரானும், பவுசியாவும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த பொலிசார், இக்பால் மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

குடும்ப கவுரவத்தை சீரழித்ததாக பெற்ற மகளையே தந்தை உட்பட உறவினர்கள் துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் ஆண்டுக்கு ஆயிரம் பெண்கள் கவுரவ கொலைகள் செய்யப்படுவதாகவும், பெரும்பாலும் சகோதரர் மற்றும் கணவனாலுமே இந்த கொலைகள் செய்யப்படுவதாகவும் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...