குளியலறையில் நிர்வாணமாக இறந்து கிடந்த பிங்கியின் போனில் என்ன வீடியோ இருந்தது? பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Santhan in தெற்காசியா

தமிழகத்தில் நிர்வாணமாக இறந்து கிடந்த பெண் சம்பவத்தில், அவரது செல்போனில் சில வீடியோக்கள் இருப்பதாக வி.ஐ.பிகள் கலக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அந்த போனில் என்ன இருந்தது என்பதை பொலிசார் கூறியுள்ளனர்.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த பிங்கி என்ற பெண், சென்னை அண்ணாநகர், ஹெச் பிளாக், 18-வது தெருவில் உள்ள தனி வீட்டில் தங்கி வந்தார். அவருடன் நேபாளத்தைச் சேர்ந்த ஹோட்டல் சமையல் மாஸ்டர் கிருஷ்ண பகதூர் என்பவரும் உடன் இருந்தார்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று பிங்கி நிர்வாணமாக குளியலறையில் இறந்து கிடந்தார். பிங்கியின் உடல் முழுவதும் டாட்டூ வரையப்பட்டு இருந்தன. அதில், காயங்களும் ரத்தத்துளிகளும் இருந்ததால், இது நிச்சயமாக கொலையாகத் தான் இருக்கும் என்று பொலிசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது அவருடன் இருந்த கிருஷ்ண பகதூர் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதனால் பொலிசார் அங்கிருந்த சிசிடிவி கமெராவை ஆராய்ந்து பார்த்த போது, அதில் பிங்கி இறந்த பின்பு தான் பகதூர் வந்திருக்கிறார்.

பிங்கி உயிரோடு இருக்கும் போது வெளியில் சென்றிருக்கிறார். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் தான் இரண்டு இளைஞர்கள் அவரின் வீட்டிற்கு வந்த சென்றது பதிவாகியிருந்தது.

அதுமட்டுமின்றி அவரின் செல்போன் எண்களையும் பொலிசார் ஆராய்ந்து வந்தனர். அப்போது தான் மாதவரத்தில் தங்கியிருக்கும் ஹரியானாவைச் சேர்ந்த விகாஷ் சர்மா, பிங்கியுடன் நீண்ட நேரம் பேசியது தெரியவந்துள்ளது.

அவர் தான் தன் நண்பர் விகாஷ்குமாருடன் வந்துள்ளார். பிங்க் டாட்டூ வேலையைத் தொடர்ந்து, ஒரு கார்ள் கேர்ளாகவும் இருந்துள்ளார். அதன் படி வாடிக்கையாளர் போன்று இவர் தன் நண்பருடன் செல்ல, அப்போது பிங்க் 4000 ரூபாய் கேட்க, விகாஷ் சர்மா 1000 ரூபாய் தான் இருக்கிறது.

சம்பளம் போடவில்லை என்று கூறியுள்ளார். இதனால் பிங்க் மிகவும் மோசமாக அவரை திட்ட, இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதில், விகாஷ் சர்மா அவரை அடித்து கொலை செய்துவிட்டு, குளியலறையில் வேறு மாதிரி திரிக்க முயற்சி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி கொலை செய்த போது, பிங்கியின் போனை அந்த நபர் எடுத்துச் சென்றுவிட்டதால், அதில் சில வீடியோக்கள் இருப்பதாக கூறி, வி.ஐ.பிக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஆனால் பொலிசார் இவனை பிடித்து விசாரித்து, அந்த போனை சோதித்த போது அதில் எந்த வீடியோக்களும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பிங்கி, கூட நட்பால் தற்போது பரிதாபமாக இறந்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்