45-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்து... ஆபாச தளங்களுக்கு விற்ற தம்பதி: அதிர்ந்த பொலிஸ்

Report Print Basu in தெற்காசியா

பாகிஸ்தானில் திருமணமான தம்பதியினர் சிறுமிகள் உட்பட குறைந்தது 45 பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய வீடிவாக பதிவு செய்து அதை விற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராவல்பிண்டியைச் சேர்ந்த பாகிஸ்தான் தம்பதியினரே இக்கொடூர செயலலில் ஈடுபட்டுள்ளனர். தன்னை பாலியல் பலாத்காரம் செய்து படமாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து பொலிசார் சனிக்கிழமை தம்பதியைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.

நகர காவல்துறை அதிகாரி முஹம்மது பைசல் ராணாவின் கூறியதாவது, கைது செய்யப்பட்ட நபரின் தொலைபேசியிலிருந்து 10 சிறுமிகளின் வீடியோக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான நிர்வாண புகைப்படங்கள் மீட்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளான கணவன், மனைவியும் இந்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆபாச வலைத்தளங்களுக்கு விற்கும் தொழிலை நடத்தி வருகின்றனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், தம்பதியினர் நட்பாக பேசி கவர்ந்த அவளை தங்கள் காரில் Gulistan காலனியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர், அங்கு குற்றம் சாட்டப்பட்டவர் அவளை மிரட்டி பலாத்காரம் செய்தார், அதே நேரத்தில் அவரது மனைவி முழுவதையும் படமாக்கினார் என தெரிவித்துள்ளார்.

சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் பொலிசை அணுகியுள்ளார், உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிசார் சந்தேக நபர்களை கைது செய்தள்ளனர். கணவரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், அவரது மனைவியை சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

கணவன் இடம் நடத்திய விசாரணையில், இதுவரை 45 பெண்களை இதுபோன்று செய்து வீடியோக்களை விற்றதாக ஒப்புக்கொண்டதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தம்பதியால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணும் பொலிசை அணுகியுள்ளார் என்று கூறினார்.

பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முன்வருமாறு பொலிஸ் அதிகாரி கேட்டுக்கொண்டார், மேலும் அவர்களின் விவரங்களை ரகசியமாக வைத்திருப்பதாக உறுதியளித்தார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers