கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக நினைத்து பயத்தில் உயிரை விட்ட இளைஞன்! இரத்த பரிசோதனையில் தெரிந்த உண்மை

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அடைக்கப்பட்ட இளைஞன் தற்கொலை செய்த நிலையில் பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாலாசூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் கடந்த 18ஆம் திகதி டெல்லி திரும்பியுள்ளார்.

இதனிடையே டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்தில், அந்த இளைஞர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தபட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த அதிகாரிகள் சோதனையில் அந்த இளைஞருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

அவரது இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தனக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் என்ற பயத்தில் அந்த இளைஞன் இருந்து வந்த நிலையில் திடீரென மருத்துவமனையின் 7-வது மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குடும்பத்தினரும் அதிகாரிகள் செயலே காரணம் என்று குற்றம் சாட்டினர்.

இதனிடையில் உயிரை மாய்த்து கொண்ட இளைஞனின் இரத்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்