வன்னி இலைகளால் விநாயகரை வழிபடுவது ஏன்? பலன் இதுதான்

Report Print Printha in ஆன்மீகம்

வன்னி இலைகள் கொண்டு விநாயகரை தரிசித்து வந்தால் நமது ஏழு ஜென்ம பாவ துன்பங்கள் அனைத்து நீங்கி வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது ஐதீகமாக உள்ளது.

வன்னி இலைகளால் விநாயகரை தரிசிப்பது ஏன்?

முன்னொரு காலத்தில் விதர்ப்ப நாட்டை ஆண்டு வந்த சாம்பன் எனும் அரசனின் கொடுங்கோலான ஆட்சியால் மக்கள் துயரமடைந்தனர்.

துர்புத்தி என்ற அமைச்சன் அந்த மன்னனின் அடாவடித்தனத்திற்கு துணை நின்றான்.

அதனால், மறு பிறவியில் காகமும் ஆந்தையுமாக இருவரும் பிறந்தனர். அடுத்து பாம்பும் தேளுமாகவும், நான்காம் பிறவியில் நாயும் பூனையுமாகவும், ஐந்தாம் பிறவியில் குதிரையும் கழுதையாகவும், ஆறாம் பிறவியில் மீனும் முதலையுமாகவும், ஏழாம் பிறவியில் புலியும் மானுமாகவும் பிறந்தனர்.

அதற்கடுத்த பிறவியில் வேடனும் ராட்சதனுமாகப் பிறந்து ஒவ்வொரு பிறவியிலும் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டே போகும் வாழ்க்கை அமைப்பு அவர்கள் இருவருக்கும் அமைந்தது.

அப்படி, வேடனை ராட்சதன் துரத்திய நிலையில், பயத்தில் வேடன் வன்னி மரத்தில் ஏறி பதுங்கும் போது ஏற்பட்ட சலனத்தால் வன்னி மர இலைகள் உதிர்ந்து மரத்தின் கீழ் இருந்த விநாயகர் மீது விழுந்தது.

அப்போது ராட்சதனும் அம்மரத்தில் ஏறி வேடனைப் பிடிக்க முயலுகையில், வன்னி இலைகள் மீண்டும் உதிர்ந்து விநாயகருக்கு அர்ச்சனையாக விழுந்தது.

சதுர்த்தி திதியுடன் உள்ள அந்தி நேரத்தில் வன்னி இலைகளால் இருவரும் அர்ச்சனை செய்த காரணத்தால் ஒருவரை ஒருவர் வீழ்த்தி கைலாயம் சென்ற போது, அவர்கள் இருவருக்குமே சொர்க்கம் கிடைத்ததாக புராணங்கள் கூறுகின்றது.

எனவே ஏழு பிறவியில் அவர்கள் அடைந்த துன்பங்கள் சங்கடஹர சதுர்த்தி வேளையில், வன்னி இலைகளால் அர்ச்சனை செய்ததால், விநாயகர் முக்தி கொடுத்தார்.

அதனால் தான் விசேஷ தினங்களில் வன்னி இலைகளால் விநாயகரை வழிபட்டு வந்தால், நம் ஏழு ஜென்ம துன்பங்கள் அனைத்தும் நீங்கி, இன்பமான வாழ்க்கை அமையும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers