இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் மனதை வசீகரிப்பதில் வல்லவர்களாம்!

Report Print Nalini in ஆன்மீகம்

இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை கவர எதுவும் செயற்கையாக செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அவர்களின் குணம் இயல்பாகவே அனைவரையும் காந்தம் போல் ஈர்த்துவிடுமாம்.

எந்தெந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே மற்றவர்களின் மனதை வசீகரிக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பார்ப்போம்:

மேஷம்

மேஷ ராசிக்காரர்களை எதிர்ப்பது கடினம். ஏனென்றால் அவர்கள் நேர்மறையாகவும், ஆக்கபூர்வமானவும், வேடிக்கையானவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் சாகச உணர்வும், கட்டுப்பாடில்லாமல் சிந்திக்கும் திறன் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற அனைத்து வழிகளிலும் முயற்சி செய்வார்கள். இறுதியில் வெற்றியும் அடைவார்கள். நேர்மையாக இருப்பதால் இவர்களை பிடிக்காதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் அனைவரையும் ஈர்க்கும் சில குணங்கள் இவர்களிடம் இருக்கும். இவர்கள் அனைவரையும் ஒன்றாக வைத்திருக்க நினைப்பார்களாக இருப்பார்கள். யாரையும் தவறாக நினைக்க மாட்டார்கள். அனைவரிடமும் ஒரே மாதிரியாக இருப்பார்கள். மேலும் அவர்களின் சிந்திக்கும் ஆற்றலும், ஆக்கபூர்வமான திறனும் அனைவரையும் இவர்கள் பக்கம் இழுக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் எவரையும் தங்களின் ஆற்றலால் ஆச்சரியப்படுத்தக் கூடியவர்கள். இவர்களின் அதீத தன்னம்பிக்கை சுற்றியிருப்பவர்களின் தைரியமாய் இருக்கச் செய்யும். இவர்களின் மந்திர நம்பிக்கை அனைவருக்குள்ளும் நேர்மறை ஆற்றலை ஏற்படுத்தும். இவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக உணர வைப்பார்கள். இவர்களின் ஆளுமை, இரக்ககுணம், தாராள மனப்பான்மை இவர்களை அனைவருக்கும் பிடிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் கற்பனைக்கு எட்டாத நகைச்சுவை உணர்வும், தாராளமனப்பான்மையும், எதையும் வெளிப்படையான பேசும் மனது கொண்டவர்கள். இவர்களை பார்த்ததுமே அனைவருக்கும் பிடித்து விடும். அவர்களின் பேச்சு அனைவருக்கும் உற்சாகம் கொடுக்கும். தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வதன் மூலம் அவர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விடுவார்கள். இவர்கள் அருகில் இருப்பது உலகமே அருகில் இருப்பது போன்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவதால் எல்லோரின் மனங்களை தனுசுகாரர்கள் கொள்ளையடித்துவிடுவார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் எப்பொழுதும் வாதாடவும், ஆதரவாகவும் இருப்பார்கள். இவர்களை போன்ற நம்பிக்கைக்குரிய, விசுவாசமான நண்பர்களை யாருக்குத்தான் பிடிக்காது. தீயகுணம் இன்றி நேர்மையாக தனுகாரர்கள் இருப்பவார்கள். இவர்களின் அணுகுமுறை எப்போதும் மகிழ்ச்சிகரமானதாகவே இருக்கும். வசீகரமான பல விஷங்கள் இவர்களிடம் இருப்பதால் அனைவரும் இவர்களை விரும்புவார்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மந்தமான தருணம் என்பதே இருக்காது. எப்போதும் துடிப்புடனே இருப்பார்கள். வேடிக்கையான இவர்கள் நீங்கள் எதிர்பார்க்கும்போது புத்திசாலித்தனமான விஷயங்களை செய்து விடுவார்கள். சொல்லப்போனால் இவர்கள் அருகில் இருக்கும்போது அனைத்தும் வேடிக்கையாகவே இருக்கும். இப்படி இருப்பதால் அனைவரையும் இவர்கள் கவர்ந்து விடுவார்கள்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்