செல்வம் நிலைக்க மென்மேலும் பெருக வேண்டுமா? இவற்றை மட்டும் செய்தாலே போதுமாம்!

Report Print Kavitha in ஆன்மீகம்

எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும் பணம் கையில் தங்கவில்லை என்று நம்மில் பலர் புலம்பி கொண்டே இருப்பதுண்டு.

இதற்கு வாஸ்துவும் ஒரு காணரமாக அமைகின்றது. ஏனெனில் ஒரு பொருளை நீங்கள் வைக்கும் திசை உங்கள் வாழ்க்கையில் சில மாறுதல்களை உண்டு பண்ணும்.

வாஸ்துவில் இதனை பண ஈர்ப்பு விதி என்கிறார்கள். பணத்தை வைக்கும் மரபெட்டிக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு என கூறப்படுகின்றது.

அந்தவகையில் செல்வம் நிலைக்க மென்மேலும் பெருக வேண்டும் என்று நினைப்பவர்கள் பணப்பெட்டியை எங்கே வைப்பதனால் செல்வம் பெருகும் என்று இங்கு பார்ப்போம்.

  • செல்வம் நிலைக்க மென்மேலும் பெருக வேண்டும் என்று நினைப்பவர்கள், உங்களது பணப்பெட்டியை வடக்கு திசையில் வைப்பது நல்லது. பணப்பெட்டி அல்லது பீரோ இவற்றில் தான் பணத்தை வைக்க வேண்டும்.

  • பணத்தை சுற்றிலும் தெய்வீக மணம் வீச வேண்டும். பணப்பெட்டியில் அல்லது பீரோவில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, மாதுளை குச்சி போன்ற லக்ஷ்மி அம்சம் பொருந்திய பொருட்களை வாசனைக்காக வைத்துக்கொண்டால் செல்வம் நிலையாக தங்கும்.

  • வடக்கு திசையில் வைக்க முடியாதவர்கள் மாற்றாக கிழக்கு திசையில் வைக்கலாம். கிழக்கிலும் செல்வம் பெருகுவதற்கான வாஸ்து சாஸ்திரம் இடம்பெற்றுள்ளன.

  • நீங்கள் பணத்தை வைக்கும் இடத்தில் லக்ஷ்மி குபேர படத்தை, அல்லது எந்திரத்தை வைத்துக்கொண்டால் செல்வம் மேலும் பெருகும்.

  • நீங்கள் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்களாக இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் அமர்ந்திருக்கும் இருக்கை ஆனது வட மேற்கு திசையை நோக்கியவாறு இருந்தால், நீங்கள் பணம் வைக்கும் பெட்டி உங்களுக்கு இடது புறத்தில் இருக்குமாறும் கிழக்கு திசையை நோக்கியவாறு இருக்கை இருந்தால் வலதுபுறத்தில் பணத்தை வைக்கும் இடம் அமைத்துக் கொள்வது நல்லது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்