ஈஸ்டர் தற்கொலை தாக்குதல்... தடுமாறிய தீவிரவாதி.. உயிர் தப்பிய பலர்: வெளியான பகீர் வீடியோ

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கையில் ஈஸ்டர் நாளன்று பிரபல ஹொட்டலுக்குள் புகுந்த தற்கொலை குண்டுதாரி தொடர்பில் சில்லிட வைக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

குறித்த தற்கொலை குண்டுதாரி அந்த ஹொட்டலுக்குள் நுழையும்போது லிப்டில் அவருடன் 2 பிள்ளைகளுடன் தாயார் ஒருவரும் சென்றுள்ளார்.

இலங்கையில் பிரபலமான ஹொட்டல்களில் ஒன்று தாஜ் சமுத்ரா. ஈஸ்டர் நாளில் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகளால் குறி வைக்கப்பட்ட ஹொட்டல்களில் இதுவும் ஒன்று.

சம்வத்தின்போது இந்த ஹொட்டலுக்குள் நுழைந்த தற்கொலை குண்டுதாரி அப்துல் லதிஃப் ஜமீல் முகமதுவுக்கு லிப்டில் இடம் விட்டு நின்றுள்ளனர் ஒரு தாயாரும் அவரது 2 பிள்ளைகளும்.

அந்த பிள்ளைகள் இருவரும், தங்கள் அருகாமையில் நின்றிருக்கும் அந்த நபர் ஒரு தற்கொலை குண்டுதாரி என்பதும், அவர் சுமந்து செல்லும் பெட்டி மற்றும் பையில் வெடிகுண்டு இருப்பதையும் அறியாமல் சிரித்த முகத்துடன் உள்ளனர்.

இதனிடையே ஜமீல் முகமது அந்த லிப்டில் இருந்து வெளியேறி உணவு பரிமாறப்படும் தளத்திற்கு முன்னேறுகிறார்.

போகும் வழியில் தனது மொபைலில் அவர் யாருக்கோ தகவல் அனுப்பியவாறே செல்கிறார்.

பின்னர் அந்த அறைக்குள் நுழைந்த ஜமீல் முகமது, கூட்டத்தினிடையே புகுந்து தம்மிடம் இருக்கும் வெடிகுண்டை வெடிக்க முயற்சி செய்கிறார்.

ஆனால் அவரது முயற்சி தோல்வியில் முடிகிறது, இதில் பதற்றமடைந்த அவர், அங்குள்ள இருக்கை ஒன்றில் அமர்ந்து மீண்டும் முயற்சிக்கிறார்.

பலமுறை முயற்சித்தும் அவரால் வெற்றிகாண முடியவில்லை என்பதை உணர்ந்ததும், ஹொட்டலை விட்டு வெளியேற முடிவு செய்கிறார்.

அப்போது அவர் எடுத்துவந்த வெடிகுண்டு பெட்டி கதவருகே சிக்கிக்கொள்ள, ஹொட்டல் ஊழியர் ஒருவர் விரைந்துவந்து அவருக்கு உதவுகிறார்.

மேலும், இன்னொரு ஊழியர், ஜமீல் எடுத்துவந்த பெட்டி ஒன்றை அவரிடம் ஒப்படைக்கிறார்.

தாஜ் சமுத்ரா ஹொட்டலை குறிவைத்த தற்கொலை குண்டுதாரியின் முயற்சி தோல்வியில் முடிந்ததும், அவர் அருகாமையில் உள்ள விடுதி ஒன்றில் நுழைந்து தனது வெடிகுண்டு பெட்டியை சோதித்ததில் அது திடீரென்று வெடித்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் நாளில் நடந்தேறிய தொடர் வெடிகுண்டு தற்கொலை தாக்குதலில் ஜமீல் முகமதுவின் முயற்சி மட்டுமே தோல்வியில் முடிந்துள்ளது.

இல்லையெனில் இறப்பு சதவிகிதம் மேலும் பல எண்ணிக்கையில் அதிகரித்திருக்கும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்