துரிதப்படுத்துங்கள்..! ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி சிறிசேனா அதிரடி உத்தரவு

Report Print Basu in இலங்கை

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ள சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை கூடியது. இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் கலந்துக்கொண்டனர்.

தேசிய பாதுகாப்பு சபை கூடிய நிலையில், சிறுக் குற்றங்கள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி, அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 77 சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு பிரிவினராலும், 25 சந்தேகநபர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,இந்த கூட்டத்தின் போது நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமைத் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்