இலங்கை ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்ச பதவியேற்கும் திகதி-யை வெளியிட்டார் சுப்ரமணியன் சுவாமி

Report Print Basu in இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றிப்பெற்றதாக முன்னரே அறிவித்த இந்தியா ராஜ்ய சபா எம்.பி-யும், பா.ஜ.க மூத்த தலைவருமான சுப்ரமணியன் சுவாமி, தற்போது பதவியேற்கும் நாள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் இறுதி அதிகாரப்பூர்வ முடிவு மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் வெளியாகும் என தேர்தல் ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நவம்பர் 17ம் திகதி காலை 8:18 மணிக்கு இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றிப்பெற்று விட்டதாக சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் தெரிவித்தார்.

மீண்டும் காலை 10:49 மணிக்கு சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டதாவது, மகிந்த ராஜபக்சாவிடம் இருந்து அழைப்பு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது சகோதரர் கோத்தபயாவின் வெற்றிகரமான ஜனாதிபதி பிரசாரத்தைப் பற்றி எனக்குத் தெரிவித்தார்.

பதவியேற்பு விழா 20ம் திகதி நடைபெறவிருக்கிறது. கோத்தபயாவுக்கு நல்ல எண்ணிக்கையிலான தமிழர்கள் வாக்களித்துள்ளதாக தமிழ் ஊடகங்கள் என்னிடம் தெரிவித்தன என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்