எனக்கு எதிராக வாக்களித்தவர்கள்... ஜனாதிபதியாகும் கோத்தபாய ராஜபக்சே பேசிய வீடியோ

Report Print Santhan in இலங்கை

இலங்கையின் புதிய ஜனாதிபதியாகவுள்ள கோத்தபாய ராஜபக்சே நான் ஒரு ஜனாதிபதியாக இருப்பேன் என்று பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இலங்கையின் 7-வது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபாக்சே நாளை பதவியேற்கவுள்ளார். தமிழர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் கோத்தபாய ராஜபக்சே அந்தளவிற்கு வாக்குகள் பெறவில்லை, இதனால் இவர் வெற்றி பெற்றுள்ளதால் அவர்கள் நிலை என்ன ஆக போகிறதோ என்ற அச்சம் நிலவியது.

இது குறித்து தமிழக தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதியாகவுள்ள கோத்தபாய ராஜபக்சே, எனக்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, எனக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும், அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நான் ஜனாதிபதியாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் பயத்தில் இருந்த தமிழர்கள் பலர் இது போதும் என்று சமூகவலைத்தளங்களில் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...