இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தபடவிருந்த உயிரினங்களின் மதிப்பு... அதிகாரிகள் கண்ட காட்சி

Report Print Santhan in இலங்கை

தமிழகத்தில் இருந்து இலங்கை வழியாக வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த தடைசெய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களை வனத் துறையினர் பறிமுதல் செய்த நிலையில், கடத்தல்காரர்கள் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக, இலங்கைக்கு கள்ளத் தோணியில் தடைசெய்யப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் கடத்தப்பட்டு அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, ராமநாதபுரத்தை அடுத்த பாசிபட்டிணம் பேருந்து நிலையம் அருகே பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையினரை கண்டதும் ஆம்னி வேன் ஒன்று நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த வனத் துறையினர் காரை மடக்கி பிடித்து வாகனத்தை சோதனை செய்தனர்.

அப்போது காரில் ஏழு சாக்கு மூட்டைகளில் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 79 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் பல்லி, 3 கிலோ கடல் குதிரைகள் என தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வனத்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், பாசிபட்டிணத்தை சேர்ந்த சர்தார், சக்திவேல், முத்துராஜா ஆகிய மூவரும் தமிழக கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு கொண்டு செல்வதற்காக அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பதப்படுத்தி சாக்கு பைகளில் கட்டி காரில் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட கடல் பல்லி, கடல் குதிரை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஓம்னி காரையும் பறிமுதல் செய்த வனத் துறையினர், கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்