இனி இவர்கள் எளிதாக சுவிஸ் குடியுரிமை பெறலாம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்தில் மூன்று தலைமுறைகளாக வாழும் வெளிநாட்டவர்களும்கூட, அவர்களது பெற்றோருக்கும் தாத்தா பாட்டிக்கும் சுவிஸ் குடியுரிமை இல்லாமல் தவிக்கின்றனர்.

இவர்கள் குடியுரிமை பெறவேண்டுமென்றால், ஒரு நீண்ட, கடினமான, பணம் செலவாகக்கூடிய நடைமுறைக்கு உட்படவேண்டும்.

ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், மூன்றாம் தலைமுறையினர் குடியுரிமை பெறுவதற்கான ஒரு எளிய முறையை அனுமதிக்கும்படி சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.

இந்த நடைமுறை தற்போது சுவிஸ் குடிமக்களை திருமணம் செய்பவர்களுக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் மட்டும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதன்மூலம் புலம்பெயர்ந்தோரின் பேரப்பிள்ளைகள் இனி எளிதாக குடியுரிமை பெற முடியும், இந்த நடைமுறை பிப்ரவரி 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.

ஆனால், இந்த நடைமுறையைப் பின்பற்றி குடியுரிமை பெற விரும்புவோருக்கு சில கட்டுப்பாடுகளும் உள்ளன.

  • சுவிற்சர்லாந்தில் பிறந்திருக்கவேண்டும்.
  • சுவிற்சர்லாந்திலேயே ஐந்து ஆண்டுகள் பள்ளிப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • ஒரு நிரந்தர Residence Permit வைத்திருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி அவர்களது பெற்றோருக்கும் தாத்தா பாட்டிக்கும்கூட சுவிற்சர்லாந்தில் வாழ்தல் மற்றும் கல்வி கற்றல் தொடர்பான சில கட்டுப்பாடுகள் உள்ளன.

சுவிற்சர்லாந்தில் இத்தகைய கட்டுப்பாடுகளுக்குப் பொருந்தும் நிலையில் தோராயமாக 25000 மூன்றாம் தலைமுறையினர் உள்ளனர்.

இவர்களில் 60 சதவிகிதத்தினர் இத்தாலியர்கள் என்று அரசின் ஆய்வுகளில் ஒன்று தெரிவிக்கிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்