கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை: சுவிஸ் அரசு அதிரடி

Report Print Trinity in சுவிற்சர்லாந்து

சுவிஸ் அரசாங்கம் கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை தரக்கூடிய மசோதா ஒன்றை நிறைவேற்றி உள்ளது.

பாலியல் வன்முறை, உடல் ரீதியான கொடுமைகள் போன்ற குற்றங்களுக்கான தண்டனைகளை மேலும் அதிகப்படுத்தி தனது பீனல் கோடுகளின் சட்டங்களில் சீர்திருத்தம் செய்திருக்கிறது சுவிஸ் அரசு. தற்போது இவ்விஷயம் சம்பந்தமாக பாராளுமன்றத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறது.

கடந்த புதன்கிழமையன்று இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாலியல் சம்பந்தப்பட்ட வன்முறைகளையும், உயிர் அச்சுறுத்தல் மற்றும் உடல் ரீதியிலான சித்ரவதைகள் போன்றவற்றிற்கும் குறைந்த பட்சமாக ஒரு வருட கடுங்காவல் தண்டனை என விதித்திருந்த நிலையில் இனிமேல் குறைந்தபட்ச கடுங்காவல் தண்டனையே இரண்டு வருடம் என மாற்றியுள்ளது சுவிஸ் அரசாங்கம்.

அது மட்டுமின்றி கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு இனி பாலின பேதமில்லை எனவும் சட்டத்தை சீர்திருத்தியிருக்கிறார்கள். இதுவரையில் சுவிஸ் அரசாங்கத்தை பொறுத்தவரை ஒரு ஆண் பெண்ணை பலவந்தப்படுத்துவது மட்டுமே கற்பழிப்பு என்று கருதப்பட்டு வருகிறது. இனி பெண் ஆண்னை பலவந்தப்படுத்துவதும் கற்பழிப்பு என இச்சட்டம் குறிக்கிறது.

பாலியல் பலாத்காரம் மட்டுமின்றி 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கும் குறைந்த பட்சமாக ஒருவருட சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டும் என சட்டத்தை மாற்றி அமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் பொதுவாக உடல் ரீதியில் தீங்கு விளைவிப்பவர்களுக்கான தண்டனை ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் என இரட்டிப்பாகி உள்ளது. பொது அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கும் இதே போன்று குறைந்த பட்ச தண்டனை ஒரு வருடமாக மாற்றப்பட்டுள்ளது.

சமூக மதிப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் கடமைப்பட்டிருப்பதை கணக்கில் எடுத்துக்கொண்டு கடந்த நாற்பது வருடங்களில் 70முறைகளுக்கும் மேல் இது போன்று சட்ட சீர்திருத்தங்களை செய்துள்ளது சுவிஸ் அரசு.

சர்ச்சைக்குரிய இந்த சட்ட சீர்திருத்தங்கள் பாராளுமன்ற விவாதங்களின் போது கடுமையாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers