கூகுளில் ரூ.1 கோடி சம்பளமாக பெறும் பெண்

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து
400Shares
400Shares
ibctamil.com

இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த மதுமிதா குமார் என்ற பெண்ணுக்கு ஆண்டுதோறும் ஒரு கோடியே எட்டு லட்ச ரூபாய் சம்பளத்தில் கூகுளில் வேலை கிடைத்துள்ளது.

பீகாரின் பாட்னாவில் உள்ள சன்பத்ரா பகுதியில் வசித்து வருகிறார் மதுமிதா ஷர்மா(வயது 25), ஜெய்ப்பூரில் உள்ள ஆர்யா தொழில்நுட்ப கல்லூரியில் பிடெக் பட்டம் பெற்றார்.

தற்போது சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் நிறுவனத்தில் நேற்று முன்தினம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இந்திய ரூபாய் மதிப்பின்படி, ஆண்டுக்கு ஒரு கோடியே எட்டு லட்ச ரூபாய் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பாக அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் மெர்சிடஸ் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்களிடம் இருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறும் மதுமிதா, ஏழு சுற்றுகளை கடந்து வேலைக்கு சேர்ந்துள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் புத்தகங்கள் தான் தனது மகளுக்கு உத்வேகத்தை அளித்ததாக நெகிழ்கிறார் மதுமிதாவின் தந்தை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்