சுவிட்சர்லாந்தில் தமிழர்களுக்கு எழுந்த புது சிக்கல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
1060Shares
1060Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தின் Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது.

Burgdorf நகர கல்லறை வளாகத்தை இனி விரிவாக்கம் செய்ய முடியாது என்ற நிலையிலேயே இந்த முடிவை நகர நிர்வாகம் எடுத்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு Burgdorf நகர குடியிருப்பாளர்கள் நகர நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில், எதிர்காலத்தில் இந்து மத நம்பிக்கை கொண்ட தமிழர்களுக்கு குறித்த கல்லறை வளாகத்தில் அவர்களின் உறவினர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தனர்.

போதிய இடவசதி இன்மை மற்றும் இறுதிச்சடங்கு மேற்கொள்வதில் ஏற்படும் சிரமம் என அந்த கடிதத்தில் பட்டியலிட்டிருந்தனர்.

பொதுவாக இந்துக்களின் இறுதிச்சடங்கானது பெரும்பாலும் நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெறும்.

இது கல்லறை வளாகத்தின் பொதுவான செயற்பாட்டை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

குறிப்பிட்ட இந்த தடை உத்தரவானது இப்பகுதியில் உள்ள தமிழர்களையே வெகுவாக பாதித்துள்ளது.

மட்டுமின்றி, நகரத்தார் மேற்கொண்ட இந்த அதிரடி மாறுதலை தமிழர்களுக்கு உரிய வகையில் எடுத்துக் கூறவும் இல்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்தே இந்த தடை உத்தரவுக்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு துவக்கத்தில் இதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டு, குறித்த பிரச்னைக்கு முடிவு ஒன்றையும் முன்வைத்துள்ளனர்.

இதனால் நகர நிர்வாகம் சில சலுகைகளை அறிவித்தது, மட்டுமின்றி சாத்தியங்களையும் சுட்டிக்காட்டியது. இருப்பினும் கட்டுப்பாடுகளில் எந்த தளர்வையும் நகர நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

இந்த சூழலில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்றால் முற்றாக புறக்கணிக்கப்படுவோம் என சுப்ரமணியம் என்பவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்