சுவிட்சர்லாந்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நைட் ஷிஃப்ட் விளம்பரம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
217Shares
217Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்து நிறுவனம் ஒன்று இரவு ஷிஃப்டுக்கு பணியாளர்கள் தேவை என விளம்பரம் செய்யும்போது சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தியதால் சிக்கலில் சிக்கியுள்ளது.

சூரிச்சை மையமாகக் கொண்ட உணவு மொத்த விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று, 35 முதல் 50 வயதுக்குட்பட்ட, பிரச்சினைகளற்ற, சிறு குழந்தைகள் இல்லாத பெண் வேலைக்கு தேவை என்று விளம்பரம் செய்திருந்தது.

சுவிட்சர்லாந்தின் தொழிலாளர் யூனியன் Unia-வின் போர்டு உறுப்பினரான Corinne Schärer, அந்த சொற்பிரயோகம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்கிறார்.

சிறு பிள்ளைகள் இருப்பது பணியிடத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும் என்னும் கருத்தை அந்த விளம்பரம் வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அது பெண்ணை பிற்போக்கானவராகக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாலின சமத்துவம் தொடர்பான ஃபெடரல் சட்டத்தின்படி, அது பாகுபாட்டை காட்டும் விளம்பரமாகவும் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாலின சமத்துவம் தொடர்பான ஃபெடரல் சட்டமானது, நிறுவனங்கள், பாலினம் அல்லது குடும்ப சூழலின் அடிப்படையில் பணியாளர்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதை தடை செய்கிறது.

உதாரணமாக வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள், தங்கள் குடும்ப வாழ்க்கை அல்லது குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டம் குறித்தெல்லாம் கேள்வி கேட்கப்படக் கூடாது.

ஆனால் அந்த விளம்பரத்தைக் கொடுத்துள்ள நிறுவனமோ சிறு குழந்தைகள் உள்ள பெண்கள், அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுவதாலோ அல்லது அவர்களுடைய குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுவதாலோ அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடலாம் என்பதாலேயே அவ்வாறு விளம்பரம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

இரவு ஷிஃப்டுக்கு வெறும் மூன்று பேர் மட்டுமே பணியில் இருப்பார்கள் என்பதால், ஒருவர் விடுப்பு எடுத்தால் அது பணியை வெகுவாக பாதிக்கும் என்பதால் அவ்வாறு கூறப்பட்டதே தவிர சிறு பிள்ளைகள் உடைய தாய்மார்களுக்கு தாங்கள் ஒன்றும் எதிரிகள் அல்ல என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்