சுவிட்சர்லாந்தில் பிச்சை எடுக்கத் தடை: உறுதி செய்த நீதிமன்றம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
148Shares
148Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தின் Vaud பகுதியில் பிச்சை எடுப்பதற்கு 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு தடை விதித்தது.

மதக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்த ஒரு குழுவினர் அந்த தடையை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர்.

2017ஆம் ஆண்டு Vaud அரசியல் சாசன நீதிமன்றத்தை அவர்கள் அணுகினர். அந்த நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளில் 4 பேர் அவர்களது கோரிக்கையை தள்ளுபடி செய்தனர்.

அதைத் தொடர்ந்து அந்த குழுவினர் அந்த தடையை நீக்குவதற்காக சுவிட்சர்லாந்தின் உச்ச நீதிமன்றமான ஃபெடரல் தீர்ப்பாயத்தை அணுகினர்.

சமீபத்தில் ஃபெடரல் தீர்ப்பாயமும் அவர்களது கோரிக்கையை தள்ளுபடி செய்துள்ளது. 2008ஆம் ஆண்டு ஜெனீவாவில் இதே போன்ற ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மேற்கோள் காட்டி ஃபெடரல் தீர்ப்பாயமும் அவர்களது கோரிக்கையை தள்ளுபடி செய்தது. பிச்சை எடுப்பதை தடை செய்தல், ஏழைகளை அவமதிப்பதாக உள்ளதாகக் கூறி குழுவினர் வாதிட்டனர்.

தீர்ப்பையடுத்து வழக்கை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஜெனீவாவில் இதேபோன்ற ஒரு வழக்கு ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கில் இதுவரை தீர்ப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்