ஒரு மில்லியன் சுவிஸ் நாட்டவர்கள் சைபர் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்: அதிர்ச்சி ஆய்வு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுமார் ஒரு மில்லியன் சுவிஸ் நாட்டவர்கள் சைபர் தாக்குதலுக்குள்ளாவதாக ஆய்வொன்று அதிர்ச்சி முடிவுகள் வெளியிட்டுள்ளது.

ஆனால் சுவிஸ் நாட்டவர்களில் பெரும்பாலானோர் தங்களை ஆன்லைனில் பாதுகாத்துக் கொள்ள தங்களுக்கு தெரியும் என்கிறார்கள்.

gfs சூரிச் ஆய்வு நிறுவனம் என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வொன்றில், 92 சதவிகிதம்பேர், அவர்களது மொபைல் போன்ற ஏதாவது ஒரு கருவியாவது இணையத்துடன் இணைந்தே இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

பாதிபேர் ஒரே பாஸ்வேர்டை ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளுக்கு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்கள்.

இணையம் தொடர்பான அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு கற்றுக்கொடுப்பது அவசியம் என அரசின் சைபர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers