பாடசாலை மாணவிகளின் குளியலறைக்குள் புகுந்த ஆசிரியர்: வழக்குத் தொடுத்த 7 குடும்பம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
480Shares

சுவிட்சர்லாந்தில் பாடசாலை மாணவிகளின் குளியலறைக்குள் அத்துமீறி நுழைந்த ஆசிரியர் மீது பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பில், திங்களன்று அந்த ஆசிரியர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் மண்டலத்தில் உள்ள Sierre நகரில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

Sierre நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கடந்த 2011 முதல் 2013 வரை குறித்த ஆசிரியர் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் மாணவிகளுக்கான அறையில் அவர்களுக்கு உதவுவதுபோல் அத்துமீறி நுழைவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

மேலும் மாணவிகள் குளிப்பதையும் பார்வையிட்டுள்ளார். மட்டுமின்றி இவர் அருவருப்பாகவும் நடந்துகொண்டுள்ளது தொடர்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத்தார் 48 வயதான அந்த ஆசிரியர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

மேலும் குறித்த ஆசிரியர் தொடர்பில் முன்னாள் மாணவர்கள் சிலரும் தங்களுக்கு நேர்ந்த அருவருப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

திங்களன்று இந்த வழக்கு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் அவர் மீதான குற்றசாட்டுகள் நிரூபணமானால் அவருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்