ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளின் சீருடைகள் உடலை அப்பட்டமாக காட்டுவதாக புகார்: விதிகளை மாற்ற வற்புறுத்தல்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளின் சீருடைகள் உடலை அப்பட்டமாக காட்டுவதாகவும் எனவே, அவற்றிற்கு பதிலாக ஷார்ட்ஸ் அணிந்து விளையாடும் வகையில் விதிகளை மாற்றுமாறும், Ticino மாகாண அரசின் இரண்டு உறுப்பினர்கள் உள்ளூர் ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பை வலியுறுத்தியுள்ளார்கள்.

13 வயது வீராங்கனை ஒருவர், அவரும் அவரது சக வீராங்கனையும், தங்கள் உடை விலகுவதை தவிர்ப்பதற்காக பசை போட்டு உடையை உடலுடன் ஒட்டிக் கொள்வதாக தெரிவித்தார்.

மாதவிடாயின்போது ஷார்ட்ஸ் அணிந்ததற்காக தனது மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Ticino மாகாண விதிகள் சுவிட்சர்லாந்தின் பிற பகுதிகளிலிருந்து சற்றே மாறுபடுகின்றன.

சுவிட்சர்லாந்தின் பிற பகுதிகளில் ஓரளவு உடலை மறைக்கும் வகையில் உடை அணிய அனுமதிக்கப்படும்போது, Ticino மாகாணத்தில் அதிக அளவில் உடலைக் காட்டும் வகையிலான உடை ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளால் அணியப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tatiana Lurati மற்றும் Gina La Mantia என்னும் இரு உறுப்பினர்கள், ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் ஷார்ட்ஸ் அணிந்து விளையாடும் வகையில் விதிகளை மாற்றுமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers