சுவிட்சர்லாந்தில் இளைஞரால் பெற்றோருக்கு ஏற்பட்ட துயரம்: மூவர் படுகாயம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் 22 வயது இளைஞர் ஒருவர் தமது வயதான பெற்றோரை கடுமையாக தாக்கி குற்றுயிராக விட்டுவிட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தந்தை பொலிசாரை அணுகி புகார் அளித்ததன் பேரில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஞாயிறன்று பகல் சுமார் 6 மணியளவில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியதாக தெரியவந்துள்ளது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞன் திடீரென்று தந்தையையும் தாயாரையும் இளைய சகோதரரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இதில் மூவரும் படுகாயமடைந்துள்ளனர். தாயாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவப் பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் தாயார் உள்ளிட்ட மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

மகனின் தாக்குதலுக்கு இரையான குடும்பம் இத்தாலியில் இருந்து குடியேறியவர்கள் என கூறப்படுகிறது.

இதனிடையே மாயமான இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியானது.

அந்த தாக்குதல் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி அந்த இளைஞரின் பின்னணியும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers