சூரிச் ஆற்றில் பச்சை நிற சாயத்தை ஊற்றிய சிலர்: தெரியவந்த உண்மை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சூரிச் ஆற்றில் சிலர் ஒளிரும் பச்சை நிற சாயத்தை ஊற்றியதையடுத்து, ஆறே பச்சை நிறமாக காட்சியளிக்கிறது.

சூரிச் ஆற்றினருகே திடீரென கூடிய ஒரு கூட்டத்தினர், ஆற்றில் பச்சை நிற சாயத்தை ஊற்றியதால் அப்பகுதியிலுள்ள ஆற்று நீர் முழுவதும் பச்சை நிறமானதைக் கண்ட மக்கள் பொலிசாருக்கு தகவலளித்தனர்.

விரைந்து வந்த பொலிசார் மேற்கொண்ட ஆய்வில், அந்த பச்சை நிறத்தால் மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர் விசாரணையில், அந்த ஆற்றில் சாயத்தை ஊற்றியவர்கள் Extinction Rebellion Zurich என்ற சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கவனம் ஈர்ப்பதற்காக அவ்விதம் செய்ததாக அந்த குழுவினர் கூறியுள்ளனர்.

அந்த சாயம் uranine எனப்படும் சாயம் என்றும், உணவுக்கு பயன்படுத்தும் உப்பில் உள்ள அதே அளவில்தான் அதில் நச்சுத்தன்மை உள்ளதாகவும், தண்ணீர்க்குழாய்களில் கசிவைக் கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் பொருள்தான் அது என்றும் அந்த குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் இதேபோல் அடுத்த 10 நாட்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடந்த சம்பவம் குறித்து பொலிசார் அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்