சுவிச்சர்லாந்தில் 30 வருட தமிழ் நட்புக்களின் நெகிழ்ச்சியான சங்கமம்!

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

தாயகத்தில் போரின் காரணமாக 80 துகளின் இறுதிப்பகுதியிலும் 90 களின் ஆரம்பத்திலும் சுவிச்சர்லாந்துக்கு புலம் பெயர்ந்த 12-19வயதிற்கு உட்பட்ட 20 தொடக்கம் 90 வரையான தமிழ்ச் சிறார்களை 1989ம் ஆண்டு சுவிசின் “சுமிஸ்வால்ட்” என்னும் ஊரில் “கயல்ஸ்ஆர்மே” எனும் உதவி நிறுவனத்தின் பரமரிப்பில் தங்கவைக்கப்பட்டனர்.

அம்முகாம் “ஷொனெக்”, “வீசாகன்” எனும் இடங்களுக்கு மாற்றப்பட்டு அண்ணளவாக ஐந்து வருடங்கள் இயங்கி வந்தது.

அங்கு வாழ்ந்த அச்சிறுவர்கள் காலப்போக்கில் தமக்கான வேலைகள், படிப்புக்கள் என்றும், சிலர் தொடர்ச்சியாக வேறு நாடுகளுக்கும் புலம் பெயர்ந்து அந்த முகாமிலிருந்து பிரிந்து சென்றனர்.

ஆனால் தாம் தங்கியிருந்த அந்த முகாமையும் அந்த நாட்களையும் அங்கு ஏற்பட்ட நட்பினையும் மறவாது வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் 30 வருடங்களின் பின்னர் தங்கள் குடும்பம் பிள்ளைகளுடன் சந்தித்தால் எப்படியிருக்கும்? அந்த சந்திப்பு கடந்த 14.09.2019ல் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்முகாமில் முன்பு பணியாற்றிய சுவிஸ் பிரஜைகள் (இப்போது பலர் 80 வயதை எட்டிவிட்டனர்), பல சுவிஸ் அரசியல் பிரதிநிதிகள், அவர்கள் வாழ்ந்தபோது இருந்த கிராமசேவையாளர்கள், அன்று ஆதரவுதந்த அயலவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டு சிறப்புரைகளை வழங்கினர்.

பழைய நினைவுகளை இரைமீட்டி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வில் ஐம்பதிற்கு மேற்பட்ட அம்முகாமின் பழைய தமிழ் நட்புக்கள் பல நாடுகளிலிருந்து வந்து தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.

அந்தக்காலத்தில் அவர்கள் விளையாட இலவசமாக மைதானத்தை தந்த “பப்பா” என்று செல்லமாக அழைக்கப்பட்ட “கயிஸ்பூலர்” உடன் சேர்ந்து உதைபந்தாட்டம் விளையாடி ஆட்டம் பாட்டமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

அத்தோடு தமதுபிள்ளைகளையும் தமது நட்புக்களின் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி அவர்களுக்குள்ளும் எதிர்கால நட்பினை ஏற்படுத்த வழிவகைசெய்தனர்.

அங்கு நடனங்கள், பலதரப்பட்ட இசைக்கருவிகளுடன் பாசல் மக்கேஸ் அவர்களின் இசை சோலோ, அந்தக்காலத்தில் சுவிஸ் தேசியத்தொலக்காட்சி உட்பட பல தொலைக்காட்சிகளில் வெளியாகியிருந்த இச்சிறார்கள் பற்றிய வீடியோ பதிவுகள், இவர்கள் நடித்த நாடகப்பதிவுகள், பழைய நிழற்படகோர்வைக் காட்சிகள் நட்புக்களின் கருத்துப் பரிமாற்றம் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

அங்கு வருகைதந்த சுவிஸ் பிரஜைகள் தாங்கள் இவ்வாறான சந்திப்பொன்றை இன்றுதான் கண்டோம், இது ஒரு வரலாற்றுப்பதிவு என்று வியந்தனர். உண்மையில் ஒரு புலம்பெயர்ந்த தேசத்து முகாமொன்றில் ஒன்றாய் வாழ்ந்தவர்கள் இவ்வளவு தொகையாக சந்திப்பது இதுவே முதற்தடவையாக இருக்கும் என்றே நினைக்க தோன்றுகிறது. இந்த நிகழ்வை ஏற்பாடுசெய்தவர்களை பாராட்டுவதோடு இந்நட்புக்கள் இறுதிவரை தொடர நாமும் வாழ்த்துவோம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers