நவம்பர் மாதத்தில் சுவிட்சர்லாந்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழ உள்ளன?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

மரங்களில் ஆரஞ்சு நிற இலைகள் உதிர்வது மட்டுமல்ல, இன்னும் பல மாற்றங்கள் நவம்பர் மாதத்தில் நிகழ இருக்கின்றன. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

வெளிநாட்டவர்களின் அடையாள அட்டையில் முக்கிய மாற்றம்
Thelocal

இதுவரை வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அடையாள அட்டைகள் காகிதத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த நிலையில், 2019 நவம்பர் 1ஆம் திகதி முதல் அவை கிரெடிட் கார்டுகள் போன்ற அட்டையாக வழங்கப்பட உள்ளன.

அதே நேரத்தில் காகித அடையாள அட்டைகளும் செல்லுபடியாகும்.

அவை எப்போது காலாவதியாகின்றனவோ அப்போது புதிய அட்டைகள் வழங்கப்படும். அடையாள அட்டை பெறுவதற்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

நவம்பர் மாத விடுமுறைகள்
Traveller24

நவம்பர் மாதம் 1ஆம் திகதி சில மாகாணங்களில் All Saints Dayக்காக விடுமுறை அளிக்கப்பட உள்ளதையடுத்து, அவர்களுக்கு விடுமுறைக்காலம் சீக்கிரம் தொடங்குகிறது.

கால நிலை மாற்றம் தொடர்பான பேரணிகள்
hos.ting.info

நவம்பர் மாதம் முழுவதும் நாடெங்கிலும் பல இடங்களில் கால நிலை மாற்றம் தொடர்பான பேரணிகள் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், நவம்பர் 29 அன்று முக்கிய பேரணி ஒன்று நடத்தப்பட உள்ளது.

அந்த பேரணியில் 100 நகரங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

கடிகாரங்களில் மாற்றம்
google

Daylight savings காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்தே கடிகாரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மொபைல் போன்களும், கணினிகளும் தாமாகவே அதற்கேற்ற வகையில் தங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் என்றாலும், கைக்கடிகாரங்கள், சுவர்க்கடிகாரங்கள் ஆகியவற்றில் நாமாகத்தான் மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும்.

குறிப்பாக சொல்ல வேண்டிய விடயம் என்னவென்றால், இதுபோல கடிகாரங்களை மாற்றுவது இதுதான் கடைசி முறையாக இருக்கலாம்.

காரணம், 2021இலிருந்து, ஐரோப்பிய ஒன்றியம் Daylight savingsஐ முடிவுக்கு கொண்டு வர திட்டமிடுள்ளதால், சுவிட்சர்லாந்தும் அதையே பின்பற்றும் யோசனையில் இருக்கிறது.

ஷாப்பிங் போகலாம் புறப்படுங்கள்
Articlesbase

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஷாப்பிங் போவதற்கான நேரம் வந்துவிட்டது எனலாம்.

அதிலும் Black Friday பரபரப்பு சுவிஸ் மக்களை தொற்றிக்கொண்டுள்ள நிலையில், ஷாப்பிங்குக்காக சேமிப்புகள் வைத்திருப்பது நல்லது.

நவம்பர் மாதம் 29ஆம் திகதி அனுசரிக்கப்படும் Black Friday, பெயரைக் கேட்டால் ஒரு மாதிரியாக இருந்தாலும், மேற்கத்திய நாடுகளில் மக்கள் அதிகம் ஷாப்பிங் செய்யும் ஒரு நாள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்