சுவிஸில் இந்த விளையாட்டால் தான் அதிக மரணம் ஏற்படுகிறதாம்: வெளியான புள்ளிவிவரம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என நிரூபித்திருக்கும் நிலையில், அதுவே அதிக மரணத்திற்கும் காரணமாக அமைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆரோக்கிய வாழ்வில் அதிக ஈடுபாடு கொண்ட சுவிஸ் மக்கள் பெரும்பாலும் விளைட்டுகளில் அதிக நாட்டம் கொண்டவர்களாக உள்ளனர்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை வெளியான புள்ளிவிவரம் ஒன்று, முக்கிய தகவலை வெளிக்கொணர்ந்துள்ளது.

இதில் கடந்த 2000 முதல் 2018 வரையான காலகட்டத்தில் விளையாட்டு தொடர்பான அனைத்து விபத்துகளையும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மரணங்கள் இதில் சாகச விளையாட்டில் ஆர்வம் கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எனவும், இதில் சுமார் 77 சதவிகிதம் பேர் base jumping உள்ளிட்ட சாகச விளையாட்டுப் பிரியர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

Image: Keystone / Maxime Schmid

சாகச விளையாட்டுகள் மீது ஆர்வம் கொண்ட வெளிநாட்டவர்களே சமீப ஆண்டுகளாக சுவிட்சர்லாந்துக்கு படையெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக பெர்ன் மண்டலத்தில் உள்ள Lauterbrunnental பகுதியிலேயே அதிகமானோர் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.

இங்குள்ள மலை முகடுகளே மரண எண்ணிக்கையை அதிகரிக்க காரணமாக அமைகிறது. இதனால் சுவிட்சர்லாந்தின் சமூக ஜனநாயகக் கட்சியின் Margret Kiener Nellen, சாகச விளையாட்டுகளை தடை செய்ய வலியுறுத்தி வருகிறார்.

Image: Keystone / Anthony Anex

மலையேறுதல் தொடர்பான விளையாட்டால் ஆண்டுக்கு 83 பேர் மரணமடைவதாக தெரியவந்துள்ளது. மட்டுமின்றி குளிர்கால விளையாட்டுகளால் ஆண்டுக்கு 39 பேர் மரணமடைகின்றனர்.

மொத்தத்தில் சாகச விளையாட்டுகளால் சுவிட்சர்லாந்தில் ஆண்டுக்கு 184 பேர் மரணமடைகின்றனர். இதில் 58 பேர் வெளிநாட்டவர்கள் என புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்