சுவிட்சர்லாந்தில் முக்கிய தலைவருக்கு கொரோனா உறுதி! தன்னை தானே தனிமைபடுத்தி கொண்டார்

Report Print Santhan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் கால்பந்து வீரரும், கால்பந்து கூட்டமைப்பின் தலைவருமான டொமினி பிளாங்க்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் சுவிட்சர்லாந்தில், 2217 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் நாட்டில் 842 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற கால்பந்து வீரரும், கால்பந்து கூட்டமைப்பின் தலைவருமான 70 வயது மதிக்கத்தக்க Dominique Blanc-கிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் இது தெரியவந்துள்ளதால்,ஞாற்றுக்கிழமை சோதனையில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானதால், தனது வீட்டில் தனிமைப்படுத்தியதாக சுவிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சுவிஸ் சாசர் கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவல் ஆபத்து காரணமாக ஐரோப்பாவில் தனது தேசிய லீக் கால்பந்துப் போட்டிகளை பாதியில் நிறுத்திய முதல் நாடுகளில் சுவிட்சர்லாந்து ஒன்றாகும்.

மார்ச் 3-ம் திகதி ஐரோப்பிய கால்பந்து அமைப்பான யுஇஎப்ஏவின் வருடாந்திர கூட்டத்தில் பிளாங்க் கலந்து கொண்டார், மேலும் 55 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் உள்நாட்டு கால்பந்தாட்டத்தை மூடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த பிரச்சினையை எழுப்பினார்.

விளையாட்டுப் போட்டிகளை நிறுத்துவது தொடர்பாக ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற கூட்டத்தில் ப்ளாங் பேசியபோது கொரோனா வைரஸ் காரணமாக, நம்மில் ஒரு பகுதியினருக்கு, நமது தொழில்முறை கால்பந்து அதன் அஸ்திவாரங்களை அசைக்கக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறோம், என்று தெரிவித்துள்ளார்.

கூட்டம் நடைபெற்று இரு வாரங்கள் கூட முழுமையடையாத நிலையில் தொண்டை புண் மற்றும் லேசான இருமல் ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு சோதனைகள் செய்யப்பட்டன. அதன்மூலம் கால்பந்து தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இதனைப் பற்றி கால்பந்து தலைவர் Dominique Blanc , நான் இப்போது நன்றாக உணர்கிறேன் மற்றும் லேசான காய்ச்சல் அறிகுறிகளை மட்டுமே கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, சுவிஸ் கால்பந்தின் தலைமையகம் மூடப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் Dominique Blanc உடன் தொடர்பு கொண்டிருந்த ஊழியர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற்று வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்