வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் எதிர்நோக்கும் பிரச்சனைகள்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

MIAu- Q(Mitwirkung von Ausländer und Auslanderin im Quartier Bümpliz und Bethlehem) என்னும் அமைப்பானது இரண்டுஆண்டுகளுக்கு ஒருமுறை இன் நிகழ்ச்சியை மேற்கொள்கின்றது.

இன் நிகழ்வில் ஒவ்வொருஆண்டும் வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான கருத்தரங்கு நடைபெறுகின்றது. இவ் அமைப்பில் இணையர் நந்தினி முருகவேள் அவர்களும் அங்கததவராக இருக்கின்றார்.

இந்த ஆண்டு ஆமைசழகழn 2020 இல் எனக்கு வேலை செய்ய விருப்பம்! Ich will arbeiten!W Aula Tscharnergut, Fellerstrasse 18, Bern என்னும் தலைப்பில் 05.09.2020 அன்று மாலை 16.00 மணிமுதல் 20.30நடைபெற்றது.

எனக்கு வேலை செய்ய விருப்பம் என்னும் தலைப்பில் சுவிற்சர்லாந்து நாட்டில் பேர்ண் நகரப்பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கில் இந் நாட்டில் வாழும் பல நாட்டு மக்களும் கலந்துகொண்டனர்.

இந்நாட்டில் வாழும் வெளிநாட்டவர்கள் ஒரு வேலையைத் தேடும் போது எவ்வாறான பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றார்கள்?, யேர்மன் மொழியைக் கற்றுக்கொள்வதில் எவ்வாறான பிரச்சனைகள் இருக்கின்றன?

சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் வெளிநாட்டவர்கள் தங்கள் தாய்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பெற்ற சான்றிதழ்களை எவ்வாறு சுவிற்சர்லாந்து நாட்டில் அங்கீகரித்துக்கொள்வது?

இவ் வெளிநாட்டவர்கள் எவ்வாறு சுவிற்சர்லாந்து நாட்டில் ஓர் தொழிலுக்கான கல்வியைக் கற்றுக்கொள்வது? N வதிவிட அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்கள் வேலைகளைத் தேடும்போது எவ்வாறான பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றார்கள்? என்பன மிக முக்கியமாக இக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டன.

தமிழ்மொழி,அராபியமொழி, அல்பானிசுமொழி, போர்த்துக்கீசமொழி,சுபானிசமொழி, துருக்கிமொழி, பாரிசமொழி (ஆப்கானிசுதான்), சோமாலிசமொழி, திரினியாமொழி, யேர்மன்மொழி. என 10 மொழிகளைப் பேசும் மக்கள் இதில் கலந்துகொண்டார்கள்.

கொரோனா நோய்காரணமாக வரையறுக்கப்பட்ட எண்ணிக்ககையான மக்கள் முன்பதிவுகளை மேற்கொண்டே கலந்துகொண்டார்கள்.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன. மண்டபத்தில் ஒன்றரை மீற்றர் இடைவெளியிலே மக்கள் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொரு மொழிக்கும் அவ் மொழிக்கும் அம் மொழியின் சமூகஉத்தியோகத்தர் பொறுப்பாக இருந்தார்கள்.

ஆரம்ப நிகழ்வுகள் அனைத்தும் மண்டபத்தின் உள்ளே நடைபெற்றன. ஒவ்வொருமொழிக்கான கலந்துரையாடல்கள் மண்டபத்திற்கு வெளியே நடைபெற்றன.

பேர்ண் மேற்குப்பகுதியின் தமிழ்மக்களின் ஆலோசகராகக் கடமையாற்றும் இணையர் நந்தினி முருகவேள் அவர்கள் தனது சிறப்புரையில் பின்வரும் விடயங்களைக் கூறியிருந்தார்.

நாங்கள்வேலைகளைத் தேடும் போது பலவிடயங்களை எங்களிடமிருந்து வேலைவழங்குபவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

எடுத்துக்காட்டாக யேர்மன்மொழிஅறிவு,அனுபவங்கள்,சுயமாகச் செயற்படும் தன்மை. இவற்றினை நாங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவற்றிற்கான வழிமுறைகளை சுவிசுநாட்டு அரசாங்கம் வெளிநாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும், இலங்கைநாட்டு மக்களுக்கு மட்டுமல்ல எல்லா வெளிநாட்டு மக்களும் எதிர்நோக்கும் பாரிய பிரச்சனை. வதிவிட அனுமதிப்பத்திரம். N வதிவிட அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்கள் வேலை செய்வதற்கு சுவிசுநாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் தடைசெய்யப்பட்டிருக்கின்றது.

F வதிவிட அனுமதிப்பத்திரத்தை வைத்திருப்பவர்களுக்கு நேரடியாக தடைகள் விதிக்கப்படாவிடினும் வேலை வழங்குநர்கள் அவர்களுக்கு வேலை வழங்கத் தயங்குகின்றார்கள்.

எனவே இவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கும் சுவிசு நாட்டு அரசாங்கம் சட்டங்களை கொண்டுவரவேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இதைப்போலவே ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களுடைய பிரச்சனைகளைக் கூறியிருந்தார்கள். எடுத்துக்காட்டாக அராபியப் பெண்கள் தாங்கள் தலையில் துணி அணிவதால் தங்களுக்கான வேலைவாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கின்றது என மிகவும் வேதனையுடன் கூறியிருந்தார்கள்.

இவை தொடர்பான அனைத்து விடயங்களையும் குறித்து அமைப்பினூடாக சுவிசுநாட்டின் அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படுமென இவ் அமைப்பின் நிர்வாகத்தினர் உறுதிமொழி அளித்திருந்தார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்