சொக்லேட் மழை பெய்த சுவிட்சர்லாந்தில் ஒரு சொக்லேட் நீரூற்று: பின்னணியில் அதே நிறுவனம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் திடீரென ஒரு நாள் சொக்லேட் மழை பெய்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது ஒரு சொக்லேட் நீரூற்று குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

சூரிச்சுக்கும் பேசலுக்கும் நடுவில் அமைந்துள்ள Olten என்னும் நகரில், ஒரு நாள் வானிலிருந்து சொக்லேட் மழை பெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர், அந்த நகரில் அமைந்திருக்கும் சொக்லேட் தயாரிக்கும் The Lindt & Spruengli நிறுவனம், தங்கள் சொக்லேட் தொழிற்சாலையின் வெண்டிலேட்டரில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாகவே, சொக்லேட் துகள்கள் வெளியேறியதாலேயே இந்த சொக்லேட் மழை பெய்ததாகத் தெரிவித்தது.

இப்போது, மீண்டும் சொக்லேட் நீரூற்று குறித்த செய்தி ஒன்று அதே சூரிச்சில் வெளியாகியுள்ளது.

இம்முறையும், அதே சொக்லேட் நிறுவனம்தான் அந்த செய்தியின் பின்னணியில் உள்ளது. சுவிட்சர்லாந்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பல நிறுவனங்களில் Lindt & Sprüngliயும் ஒன்று.

2020ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அதன் விற்பனை 12.7 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது.

தற்போது மீண்டும் வீழ்ச்சியிலிருந்து எழ முடிவு செய்துள்ள அந்த நிறுவனம், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சொக்லேட் நீரூற்று ஒன்றை உருவாக்கி, தனது நிறுவனத்தின் புதிய கட்டிடத்தின் மையத்தில் அதை அமைத்துள்ளது.

இந்த கட்டிடம் ஆண்டொன்றிற்கு 350,000 பேரை ஈர்க்கும் என அந்த நிறுவனம் நம்புகிறது.

அந்த 9 மீற்றர் உயரமுள்ள பிரமாண்ட நீரூற்றிலிருந்து சொக்லேட் பீய்ச்சியடிக்கும் வகையில் அது அமைக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், இந்த நீரூற்றிலிருந்து வெளியாகும் சொக்லேட்டை சுவைக்க மக்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது தெரியவில்லை.

இந்த நீரூற்றை பிரபல டென்னின் வீரர் Roger Federer ’திறந்து’வைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்