சுவிஸ் மாகாணம் ஒன்றில் நாளை 3 மணி முதல் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் மாகாணம் ஒன்றில் நாளை மாலை 3 மணி முதல் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில் இதுவரை இல்லாத அளவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட உள்ளன.

இந்த மாகாணத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது, சுவிட்சர்லாந்தில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்றுகளில் மூன்றில் ஒன்று இந்த மாகாணத்தில்தான் உள்ளது.

மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, குறிப்பாக 65 வயதுக்கு மேலானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் Vaud மாகாணத்தில் 193 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

புதிதாக விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, இனி பொது இடங்களிலும், அரசு கட்டிடங்களிலும் இனி அனைவரும் மாஸ்க் அணிந்திருக்கவேண்டும்.

இரவு விடுதிகள் மூடப்படும், 100 பேருக்கு மேல் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படும்.

குறைந்தபட்சம் அப்டோபர் மாத இறுதி வரையாவது இந்த கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என்று தெரிகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்