சுவிஸில் அதிக துன்புறுத்தலுக்கு இலக்காகும் சிறார்கள்: வெளிவரும் ஆய்வு முடிவுகள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னர் சிறார்கள் மீதான் துன்புறுத்தல் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தில் குடும்ப வன்முறை அதிகரித்தது ஆய்வு ஒன்றில் தெரிய வந்த நிலையில்,

தற்போது சிறார்கள் மீதான துன்புறுத்தல் ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னர் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

லூசெர்ன் பல்கலைக்கழகத்தின் Applied Sciences பிரிவினர் மேற்கொண்ட ஆய்வில் சிறார்கள் மீதான இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

பொதுமக்களில் சுமார் 1000 பேர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 5.5 சதவீத மக்கள் குடும்ப வன்முறை தொடர்பில் பதிவு செய்துள்ளனர்.

கோடை விடுமுறை காலங்களில் மட்டும் சிறார்கள் மீதான வன்முறை 5.6 சதவீதமாக இருக்கும் நிலையில், ஊரடங்கு காலகட்டத்தில் இது 4.5 என பதிவாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்