நதியை காலி செய்யும் சுவிஸ் நகரம்... படகு சவாரி செய்வோருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள செய்தி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
0Shares

ஜெனீவாவில் ஓடும் நதி ஒன்றை காலி செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள். அதாவது, ஜெனீவாவில் ஓடும் Rhone நதியின் குறுக்கே Verbois என்ற அணை ஒன்று கட்டப்பட்டுள்ளது.

தற்போது, இந்த அணையைத் திறந்து தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.

மே மாதம் 18ஆம் திகதி, Verbois அணை திறந்துவிடப்பட உள்ளதால், நதி நீர் முழுவதும் வெளியேறிவிடும்.

அணைக்குப் பின்னால் படியும் சகதியை அகற்றுவதற்காக சில ஆண்டுகளுக்கொருமுறை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஆகவே, நதிக்கரையில் நடப்பது முதல் படகு சவாரி முதல் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட உள்ளது.

ஜூன் மாதம் 5ஆம் திகதி மீண்டும் நதி பழைய நிலைமைக்கு திரும்பிவிடும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்