டெக்ஸ்டாப்பிற்கான இணையப் பக்கத்தில் புதிய வசதியை தரும் யூடியூப்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

டெக்ஸ்டாப் மற்றும் லேப்டொப் கணினிகளில் யூடியூப் வீடியோவை பார்வையிடுவதற்கு நேரடியாக யூடியூப் இணையத்தளத்திற்கே விஜயம் செய்ய வேண்டும்.

இத் தளத்தில் தற்போது புதிய வசதி ஒன்றினை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.

ஏற்கனவே மொபைல் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த மினி பிளேயர் (Mini Player) ஆனது வீடியோவை பார்வையிட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் ஏனைய வீடியோக்களை மேலும் கீழும் அசைத்து பார்வையிடக்கூடிய வசதியையும் உள்ளடக்கியிருந்தது.

அதேபோன்று Picture-in-Picture என அழைக்கப்படும் இவ் வசதியில் தற்போது Play, Pause மற்றும் Restart வீடியோ போன்ற தொழிற்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடியதாக இருகின்றது.

இவ் வசதியையே தற்போது டெக்ஸ்டாப் கணினிகளுக்கான யூடியூப் இணையத்தளத்திலும் தரப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers