புலம்பெயர்பவர்களை பற்றிய பிரித்தானியர்களின் கருத்து என்ன? மெகா சர்வே முடிவுகள்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவுக்கு புலம்பெயர்பவர்கள் மற்றும் அந்நாட்டின் பிரச்சனைகள் குறித்து பொது மக்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அரோரா மனிதாபிமான குறியீட்டு ஆய்வு நிறுவனம் பொதுமக்களிடம் தீவிரவாத தாக்குதல்கள், புலம்பெயர்ந்தவர்களால் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கேள்விகளை கேட்டுள்ளது.

அதற்கான முடிவுகள் வருமாறு:

  • இனவாத சிறுபான்மையினரால் உள்ளூர் கலாசாரத்துக்கு அச்சுறுத்துல் உள்ளதாக 56 சதவீதம் பேர் கூறியுள்ளார்கள்.
  • புலம்பெயர்பவர்கள் வேலை வாய்ப்புகளை அதிகம் எடுத்து கொள்வதாக 24 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
  • புலம்பெயர்பவர்கள் சமுதாயத்துக்கு பங்களித்ததை விட, அனுபவித்த விடயங்களே அதிகம் என 34 சதவீதம் பேரின் கருத்தாக உள்ளது.
  • Brexit-க்கு பின்னர் அகதிகளை எதிர்கொள்ளும் திறன் பிரித்தானியாவில் குறையும் என மக்கள் கூறியுள்ளனர்.
  • பிரித்தானிய பிரதமர் தெரசா மே அகதிகளின் நெருக்கடி பிரச்சனையை தீர்த்து வைப்பார் என வெறும் 15 சதவீத மக்கள் மட்டுமே நம்புகிறார்கள்.
  • கட்டாய குடியேற்றமும், பசி பட்டினியும் முக்கியமான விடயங்களாக மக்களால் பார்க்கப்படுவதும் சர்வேயில் தெரியவந்துள்ளது.
  • மான்செஸ்டர் தாக்குதல் நடைபெறும் முன்னர் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், பயங்கரவாதம் தான் மனித இனத்துக்கு மிக பெரிய சவாலான விடயம் என மக்கள் கூறியிருந்தது முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments